
”எல்லாருக்கும் எல்லாம்” என்ற கருப்பொருளை கொண்டு மையமாகக் கொண்டு இன்றைய தினம் தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதனை ஒட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பேசியிருக்கிறார். அதில், நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தான் கிராம சபை கூட்டங்களை முறையாக தடங்கள் இல்லாமல் நடத்திக் கொண்டு வருகின்றோம். கிராமப்புற மக்களுடைய குரல் எப்போதும் எந்த சூழலிலும் தடையில்லாமல் ஒழிக்கணும் தான் இதுபோல கிராமசபை கூட்டங்களில தடையில்லாமல் நடத்து கின்றோம். மக்களாட்சி முதல்ல மலர்ந்த இடம் கிராமங்கள்.
காஞ்சிபுரம் பக்கத்துல இருக்குற உத்திரமேரூர் வட்டாரம்தான் ஜனநாயகத் தேர்தல் அமைப்பு முறை பிறந்த தொட்டிலாக வரலாற்று ஆசிரியர்களால் சொல்லப்படுகிறது. யாரெல்லாம் தேர்தல்ல போட்டியிடறாங்களோ.. அவங்க எல்லோருடைய பெயரையும் ஓலைச்சுவடியில் எழுதி குடத்துல போடுவாங்க. அந்த குடத்தை குலுக்கி ஒரு ஓலையை எடுப்பாங்க. அப்படி எடுக்கப்பட்ட பெயர்ல யாருடைய பெயர் பொறிக்கப்பட்டிருக்கோ…. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதா ?
அறிவிக்கப்படுவார். இதுதான் குடவோலை முறை. இப்படித் தான் தமிழ்நாட்டுல மக்களாட்சி என்று அமைப்பே மலர்ந்துச்சு. அந்த வகையில் பார்த்தீங்கன்னா…. கிராமங்கள்ல தான் மக்களாட்சி முறையானது முதல்ல தோன்றி இருக்கு. அதுலயும் குறிப்பா கிராம சபை என்ற அமைப்பு தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சோழர் காலம் தொட்டு பழக்கத்தில் இருந்து வருது. சோழப்பேரரசுல ஊர் மற்றும் மகாசபை என்ற இரு வேறு அவைகள் இருந்துச்சு.
இதுல மகாசபையை போன்றது தான் தற்போதைய கிராம சபை என அறிய முடியுது. மக்களாட்சியினுடைய ஆணிவேரா இருக்கிற கிராம சபை கூட்டங்களில் மக்களே நேரடியாக.. விவாதித்து… தன்னுடைய தேவைகளையும், பயனாளிகளையும் தேர்வு செய்வதிலும்… வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டுவதிலும் முக்கிய பங்காற்றி வாரங்க.
இந்திய அளவில் நாடாளுமன்றம், மாநில அளவில சட்டமன்றங்கள் இருப்பது போல கிராம அலுவல கிராம சபையானது மக்கள் குரலை எதிரொலிக்க மன்றமா அமைஞ்சிருக்கு. கிராமசபைகள் குறைந்தது ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும் என்று தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1994 குறிப்பிட்டு இருந்தாலும், அதை ஆண்டுக்கு நாலு முறை என முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மாத்தி அமைச்சார்.
தற்போதைய திராவிட மாடல் அரசாணத்தை இதை ஆண்டுக்கு ஆறு முறை கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என்று அதிகரித்து இருக்கின்றோம். அதன்படி ஆண்டொன்றுக்கு முறையே குடியரசு நாள், உலக தண்ணீர் நாள், தொழிலாளர் நாள், விடுதலை நாள், காந்தியடிகள் பிறந்த நாள், உள்ளாட்சிகள் நாள். ஆகிய ஆறு நாட்களில் கிராம சபை நடைபெற்று வருகிறது. வலுப்படுத்தனும் அப்படின்னா அதுக்கு அதிகாரம் வழங்கணும்.
நிதி ஆதாரங்களையும் ஏற்படுத்தி தரணும். கிராம சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கு. கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தை அங்கீகரித்தல், ஊராட்சிகளை மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றத்தினை கண்காணித்தல், ஊராட்சிகளின் வரவு – செலவுகளை ஆய்வு செய்தல், பயனாளிகளை தேர்வு செய்தல், திட்ட கண்காணிப்பு செய்தல். ஆகிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. கிராம சபை ஒன்றுக்கு கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளும் செலவினம் 1000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என பேசி வீடியோ வெளிட்டுள்ளார்.