தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கடைகளை ஒட்டி உள்ள மதுக்கூடங்கள் இயங்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானங்களை விற்பனை செய்தால் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமைகளை ரத்து செய்தல், மது கூட உரிமை தாரர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.