டைரக்டர் வெற்றிமாறன் இப்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் “விடுதலை” திரைப்படத்தை இயக்கி உள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இத்திரைப்படம் நாளை மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் விடுதலை படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. அதோடு இப்படத்தில் 11 இடங்களில் கெட்ட வார்த்தைகள் வரும் காட்சிகள் வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளது.