உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்த இளைஞருக்கு, சமூக வலைதளம் வாயிலாக அங்கிதா சர்மா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இளைஞர், இளம் பெண்ணிடம் தன் ரகசியங்களை கூறியுள்ளார். அதன்பின் ஒருநாள் இளைஞருடன் வீடியோ காலில் பெண் அரை நிர்வாணமாக தோன்றி பேசியதாக கூறப்படுகிறது. அப்போது இளைஞரது வீடியோவை ரெக்கார்டு செய்து கொண்ட பெண் பிறகு அதனை கொண்டு அவனை மிரட்ட தொடங்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி 30 ஆயிரம் ரூபாய் பணம் தராவிட்டால் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி விடுவதாக அப்பெண் அடிக்கடி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்தபோன இளைஞர் பணம் பறிப்பு கும்பலுக்கு ரூ.30 ஆயிரம் வழங்குவதற்காக, அண்டை மாவட்டமான பிரதாப்கர்க் சென்று தன்னைத் தானே கடத்தி கொண்டு, மற்றவரகள் கடத்தியதாக தந்தைக்கு வாட்ஸ் அப் கால் வாயிலாக பேசியுள்ளார்.
தந்தையை தொடர்புகொண்ட இளைஞர் கருப்பு வேனில் சிலர் தன்னை கடத்தியதாகவும், 2 லட்ச ரூபாய் பணம் தராவிட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின்படி, செல்போன் தொடர்பு வாயிலாக பிரதாப்கர்க்கில் இருந்த இளைஞரை காவல்துறையினர் பிடித்தனர். அதன்பின் சம்பவம் குறித்து இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் இளைஞருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட எண்ணை பெற்றுக்கொண்டு காவல்துறையினர் அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.