இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களுடைய அத்தியாவசியமான தேவைகளுக்கு கடன் பெறுவதற்கு பெரும்பாலும் வங்கிகளையே நாடுகிறார்கள். அதன்படி வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன், கல்வி கடன் என பெரும்பாலான கடன்கள் வங்கிகளில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் பெரும்பாலான வங்கிகளில் கல்வி கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படும் நிலையில், வங்கிகளில் எவ்வளவு வட்டி விகிதத்தில் கல்வி கடன் வழங்கப்படுகிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 8.30 சதவீத வட்டியில் கல்வி கடன் வழங்கப்படுகிறது.

இதற்கான செயல்பாட்டு கட்டணம் ஒரு சதவீதம் ஆகும். அதன் பிறகு கனரா வங்கியில் வட்டி 9.15 சதவீதமாக இருக்கும் நிலையில் செயல்பாட்டு கட்டணம் 0.55 சதவீதமாகும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 8.30 சதவிதமாக வட்டி இருக்கும் நிலையில் செயல்பாட்டு கட்டணம் ரூ. 20 லட்சம் வரை வசூலிக்கப்படுவது கிடையாது. ஆனால் 20 லட்சத்திற்கும் கடன் வாங்கும் போது வரி செலுத்த வேண்டும். பேங்க் ஆப் பரோடாவில் வட்டி 7.50 சதவீதமாக உள்ள நிலையில், 7.50 லட்சம் வரையிலான கடன்களுக்கு செயல்பாட்டு கட்டணம் கிடையாது.

ஐடிபிஐ வங்கியில் வட்டி 8.85%, பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி 9.10% உள்ள நிலையில் இந்தியாவின் படிக்க செயல்பாட்டு கட்டணம் கிடையாது. ஆனால் வெளிநாடுகளில் படிக்க ரூ.5000 செயல்பாட்டு கட்டணம். தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வட்டி 11.90% முதல் 12.15%, இந்தியாவின் படித்த செயல்பாட்டு கட்டணம் கிடையாது வெளிநாடுகளில் படிக்க ஒரு சதவீதம். ஹெச்டிஎஃப்சி வங்கியில் முழு நேர படிப்புக்கு வட்டி 9.55% முதல் 13.25%, பகுதி நேர படிப்புக்கு வட்டி 12.75%, செயல்பாட்டு கட்டணம் ஒரு சதவீதம்.

கர்நாடக வங்கியில் வட்டி 9.98%, பெடரல் வங்கியில் வட்டி 12.30%, செயல்பாட்டு கட்டணங்கள் வங்கியின் முடிவை பொருத்து. கரூர் வைசியா வங்கியில் வட்டி 11.20%-13.70%, செயல்பாட்டு கட்டணம் இல்லை. ஆக்சிஸ் வங்கியில் வட்டி 13.70%-15.20%, செயல்பாட்டு கட்டணம் 2.00%+ஜிஎஸ்டி வரி, கோடக் மகேந்திரா வங்கியில் வட்டி 16%, செயல்பாட்டு கட்டணம் இல்லை. மேலும் UCO வங்கியில் வட்டி 11.95%, செயல்பாட்டு கட்டணம் இல்லை.