இயக்குனர் லீனா மணிமேகலை தனது twitter பக்கத்தில் காளி சிகரெட் பிடிப்பது போன்ற சர்ச்சைகுரிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கிறது என வக்கீல் வீனித் ஜிந்தால் மற்றும் இந்து சேனை அமைப்பின் விஷ்ணு குப்தா போன்ற டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் சர்ச்சைகுரிய காளி பட போஸ்டர் தொடர்பாக லீலா மணிமேகலைக்கு எதிராக டெல்லி போலீஸ் மதத்தை உள்நோக்கத்துடன் அவமதித்தல், மத அடிப்படையில் வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் போன்ற இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

அதேபோல் உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் லீலா மணிமேகலைக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்தவக்கில் காமினி ஜெய்ஸ்வால் மனுதாரர் இயக்கம் காளி குறும்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் இல்லை. காளியை அனைத்து வடிவங்களையும் உள்ளடக்கி காட்டும் நோக்கத்தில் தான் குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் போபாலில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மனுதாரருக்கு எதிராக லுக் அவுட் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டுள்ளார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் ரிட் மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசு உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்ட பதிவு செய்யப்பட உள்ள வழக்குகளில் இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்யவும் இடைக்கால தடை விதித்து விசாரணையை பிப்ரவரி 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.