இந்தியாவில் யுபிஎஸ்சி தேர்வாணையம் நடத்திய COMBINED DEFENCE SERVICES பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த வருடம் வெளியிடப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது இந்த தேர்வின் இறுதிக்கட்ட முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி மற்றும் பதிவு எண் ஆகியவற்றை உள்ளிட்டு http://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.