டெல்லி திமர்பூர் பகுதியில் வசித்து வருபவர் நிகிழ். இவர் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் காதல் இரு வீட்டினாருக்கும் தெரியவந்த போது அவர்கள் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால் காதலியின் சகோதரிக்கு திருமணம் ஆகாததால் அவருடைய திருமணத்திற்கு பின் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து நிகிழ் வேலை பார்க்கும் உணவகத்திற்கு அருகே மொபைல் கடை உள்ளது. அந்த மொபைல் கடையின் உரிமையாளரின் மனைவிக்கும், நிகிலியின் காதலிக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் தோழிகளாக பழகி வந்துள்ளனர். அந்த சமயத்தில் திடீரென நிகில் தனது காதலியுடன் தகராறு செய்துள்ளார். அதோடு அவரை அடிக்கடி துன்புறுத்தி தாக்கியுள்ளார்.

இதனால் மனவேதனையில் இருந்த காதலி தனது தோழியின் வீட்டில் தங்கி வந்துள்ளார். இதனையறிந்த நிகில் கோபத்தில் காதலி தங்கியிருந்த தோழியின் வீட்டிற்கு சென்றபோது, அங்கு அவருடைய தோழி தனது குழந்தையை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக சென்றுவிட்டார். வீட்டில் நிகிலின் முன்னாள் காதலி மற்றும் தோழியின் குழந்தை இருந்த நிலையில் அவர்களை அடித்து துன்புறுத்தி, வாயில் டேப் ஒட்டி சத்தம் வெளியில் கேட்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

அதன்பின் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் தனது காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தையின் தலையை நசுக்கி கொலை செய்துள்ளான். பின்னர் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தியை கழுவி விட்டு தான் கொண்டு வந்த செல்போனை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்று விட்டான்.

இந்த தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நிகிலை உத்தரகாண்டில் வைத்து கைது செய்தனர். மேலும் முன்னாள் காதலியை பழி வாங்குவதற்காக அவரை கொலை செய்வதோடு மட்டுமல்லாமல் பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.