மாடலாக தன் வாழ்க்கையை துவங்கிய ஷோபிதா துலிபாலா, கடந்த 2016-ம் வருடம் ராமன் ராகவ் 2.0 திரைப்படத்தின் வாயிலாக நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்க துவங்கினார். ஷோபிதா கடந்த வருடம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரைஉலகில் அடியெடுத்து வைத்தார்.

தற்போது ஷோபிதா தி நைட் மேனேஜர் எனும் பாலிவுட் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். பிகினி காட்சிகள், லிப்லாக் முத்தக் காட்சிகள் என அன்லிமிடெட் கிளாமரை காட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ஷோபிதா. இந்த வெப் சீரிஸில் மூத்த பாலிவுட் நடிகர் அனில் கபூருடன் 30-க்கும் மேற்பட்ட முத்தக்காட்சிகளில் நடித்து உள்ளார். 66 வயதான அனில் கபூருடன் ஷோபிதா லிப் லாக் காட்சிகளில் நடிப்பதை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்து உள்ளனர்.