தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் மாதவன். இவர் சென்ற வருடம் வெளியாகிய ராக்கெட்ரி தி நம்பி எக்ஸ்போர்ட் படத்தின் வெற்றியை அடுத்து பிரபல இயக்குனரான மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக இருக்கும் புது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரவபூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலாகியது.
இந்த நிலையில் மாதவன் அலைபாயுதே ஸ்டைலில் அவருடைய லேட்டஸ்ட் செல்பி போட்டோவை தன் இணையப்பக்கத்தில் பதிவிட்டு “புதிய லுக்கில், புது ப்ராஜெக்ட் உற்சாகத்துடன்” எனக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். அதற்கு ரசிகர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
New project begins with a new look. Super excited .. 🤗🤗🙏🙏❤️❤️ pic.twitter.com/5r62GI8WBI
— Ranganathan Madhavan (@ActorMadhavan) February 27, 2023