தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 28-ஆம் தேதி ரிலீசாகும் நிலையில் தற்போது பட குழுவினர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் நிலையில் விமானத்திலிருந்து இறங்கும்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தற்போது பொன்னியின் செல்வன் 2 படகுழு வெளியிட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் இருக்கும் விக்ரம் உடல் எடை மெலிந்து காணப்படுகிறார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கலான் படத்திற்காக தன்னுடைய உடல் எடையை நடிகர் விக்ரம் குறைத்துள்ளார். மேலும் கோயம்புத்தூர் சென்றுள்ள பொன்னியின் செல்வன் படக்குழுவினர் இந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள நிலையில் விக்ரமை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.