பிரபல நடிகர் அஜித் தற்போது ஏகே 62 திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 1-ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஏகே 63 படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் அஜித்தின் வீரம் மற்றும் விசுவாசம் போன்ற படங்களை இயக்கிய சிறுத்தை சிவா தான் ஏகே63 திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த பட டீலில் நேற்று நடிகர் அஜித் கையெழுத்துட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏகே62 படத்தை முடித்த பிறகு நடிகர் அஜித் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்த சுற்றுப்பயணம் முடிந்த பிறகு ஏகே63 படப்பிடிப்பில் கலந்து கொள்வார். மேலும் இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.