தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். கர்ணன் படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் மீண்டும் மாரி செல்வராஜுடன் கூட்டணி வைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் இணையும் படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கும் நிலையில் அந்த படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே படிக்காதவன் திரைப்படத்தில் விவேக் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் வடிவேலு தான் நடித்தார். ஆனால் தனுஷ் மற்றும் வடிவேலு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக வடிவேலு படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் தற்போது முதல் முறையாக தனுஷ் மற்றும் வடிவேலு கூட்டணி இணைய இருக்கிறது. மேலும் பகையை மறந்து நடிகர் வடிவேலு தனுஷ் படத்தில் இணைந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.