தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் சிறுத்தை சிவா. இவர் தற்போது சூர்யா 42 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டைட்டில் நேற்று வெளியானது. அதன்படி சூர்யா 42 திரைப்படத்திற்கு கங்குவா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் கடந்த 1984-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது.

அதாவது தமிழில் தியாகராஜன் நடித்த மம்பட்டியான் திரைப்படத்தின் ரீமேக்காக இந்தியில் உருவாகிய கங்குவா திரைப்படத்தில் ரஜினி நடித்திருந்தார். இந்த படத்தின் டைட்டிலை தான் தற்போது சிறுத்தை சிவா வைத்து இருக்கிறார். மேலும் கங்குவா என்றால் நெருப்பு பவர் கொண்டிருக்கும் நபர் என்று அர்த்தம் எனவும் இணையத்தில் தகவல்கள் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.