யுஜிசி நெட் தேர்வு நடப்பு ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வுக்கான அனுமதி சீட்டுகள் வெளியிடப்பட்டு தேர்தல்கள் தயாராகி வருகிறார்கள். யுஜிசி நெட் தேர்வுகள் வருடத்திற்கு இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் 83 பாடங்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் பாடத்திட்டங்களை மேம்படுத்தும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் பாடத்திட்டங்களை திருத்துவதற்கு முடிவு செய்யப்பட்ட நிலையில் அதற்காக யுஜிசி ஒரு நிபுணர் குழுவை அமைத்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் பழைய பாடத்திட்டத்தின் படி நடைபெறும் இறுதி தேர்வு இந்த ஆண்டு நடைபெறும் தேர்வு தான் எனவும் அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அவளுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.