இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு மொத்தம் 154 பொருட்கள் வழங்கப்படும் நிலையில் மானிய விலையில் 94 ரேஷன் பொருள்களும் தள்ளுபடி விலையில் 60 ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ள நிலையில் 42 உணவு பொருட்கள் சுகாதார அடிப்படையில் இனி ரேஷன் கடை மூலம் வழங்கப்பட மாட்டாது என மத்திய வர்த்தகம் தெரிவித்துள்ளது.

இந்த 42 வகையான உணவுப் பொருட்களும் நாட்டில் மிக குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அவை மொத்தமாக தடை செய்யப்பட்டுள்ளன. அதன்படி சுவையூட்டப்பட்ட பால், கப் கேக், பிஸ்கட், துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சி மற்றும் மீன் துண்டுகள் உள்ளிட்ட 42 வகையான ரேஷன் பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.