கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற ‘தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயண’ கூட்டத்தில் பாமகவைச் சேர்ந்த சௌமியா அன்புமணி கலந்துகொண்டு திமுக அரசை மிகக்கடுமையாகச் சாடினார்.
“சின்னஞ்சிறு பெண் குழந்தைகளைக் கூட மது குடிக்க வைத்ததுதான் இந்த விடியா அரசின் சாதனை” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் வீதிக்கு வீதி மதுக்கடைகளைத் திறந்து வைத்துவிட்டு, அரசுப் பள்ளிகளை மூடி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கல்வித்துறை குறித்துப் பேசிய அவர், “அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை சரிந்து வருவதற்கும், தனியார் பள்ளிகளுக்கு மக்கள் செல்வதற்கும் அரசின் திறமையின்மையே காரணம். பள்ளிகளை மூடுவதுதான் வேலையென்றால், எதற்காக இரண்டு அமைச்சர்கள் (உதயநிதி மற்றும் அன்பில் மகேஷ்)?” என்று கேள்வி எழுப்பினார்.
அதே நேரத்தில், 108 ஆம்புலன்ஸ் திட்டம் மற்றும் பாதுகாப்பான மருத்துவச் சிகிச்சைகளை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் அன்பமணி ராமதாஸ் என்பதைப் பெருமையுடன் சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் நேரத்தில் மதுவை ஒழிப்போம் என்று கூறும் ஆட்சியாளர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனப் பெண்களிடம் கேட்டுக்கொண்டார்.
