2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக இப்போதே தனது தேர்தல் வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக, கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இந்தக் குழுவில் டி.கே.எஸ். இளங்கோவன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போன்ற முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

​அடுத்த தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவும் என்பதால், ஆட்சியைத் தக்கவைக்கத் திமுக பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை உயர்வு குறித்த அறிவிப்பு இதில் மிக முக்கிய இடம்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.