தமிழ் சினிமாவில் 2 கதாநாயகர்கள் நடித்துள்ள 2 படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவது மிகவும் அபூர்வம். ஆனால் தற்போது சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடித்துள்ள பத்து தல திரைப்படம் மற்றும் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை திரைப்படம் போன்றவைகள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது. அதாவது பத்து தல திரைப்படம் மார்ச் 30-ம் தேதியும், விடுதலை திரைப்படம் மார்ச் 31-ஆம் தேதியும் ரிலீஸ் ஆகிறது.

2 முன்னணி ஹீரோக்கள் நடித்துள்ள 2 படங்கள் அடுத்தடுத்த நாளில் ரிலீஸ் ஆவது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்து தல படத்தை ஒபலி கிருஷ்ணா இயக்கியுள்ள நிலையில், விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இரண்டு படங்களும் ஆக்ஷன் திரைப்படங்கள். பத்து தல படத்திற்கு ஏ.ஆர் ரகுமானும், விடுதலை படத்திற்கு இசைஞானி இளையராஜாவும் இசை அமைத்துள்ளனர். மேலும் இந்த இரு திரைப்படங்களில் எந்த படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறப் போகிறது என்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.