தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பக்ரு. இவர் டிஷ்யூம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பல தமிழ் படங்களில் நடித்துள்ள பக்ரு தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவதாக ஒரு குழந்தை பிறந்துள்ளது.

திருமணமாகி 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தந்தையான பக்ரு தன்னுடைய புதிய குழந்தையை கையில் ஏந்திய படி மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தன் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் இந்தியாவின் வைரல் ஆகி வரும் நிலையில் நடிகர் பக்ருவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Guinnespakru (@guinnespakru_official)