நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் மாநாடு இன்று நடைபெற இருக்கின்றது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது . அது மட்டுமல்லாது திரை பிரபலங்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் விபத்தில் இடது காலை இழந்த மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர் ஒருவர் தஞ்சையிலிருந்து சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இதில் தஞ்சை பிள்ளையார்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா தீவிர விஜய் ரசிகராக உள்ளார். இந்நிலையில் சாலை விபத்தில் சிக்கி தனது இடது காலை இழந்து மாற்றுத்திறனாளியான இவர் அச்சகம் ஒன்றை நடத்தி வேலை பார்த்து தனது 2 மகன்களையும் படிக்க வைத்து வருகின்றார்.
இதனையடுத்து விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இவர் தஞ்சையில் இருந்து சுமார் 190 கிலோமீட்டர் பயணம் செய்து இன்று பிற்பகல் மாநாட்டு திடலை அடைய திட்டமிட்டுள்ளார். மேலும் தஞ்சையிலிருந்து புறப்பட்ட அவரை விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வாழ்த்தி வழி அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து மாற்றுத்திறனாளியான 13 வயதில் ஒரு விபத்தில் காலை இழந்தேன் நான் தீவிர விஜய் ரசிகர். எந்த ஒரு கட்சியிலும் மாற்றுத் திறனாளி என ஒரு பிரிவு இல்லை ஆனால் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் மாற்றுத்திறனாளி அணி உருவாக்கி பொறுப்புக்கள் வழங்கி மாற்றுத்திறனாளிகளை கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆகவே தலைவர் விஜயின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி கொண்டு செல்கிறேன் என ராஜா தெரிவித்துள்ளார்.
