தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வரும் நிலையில், கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) இடையே நடைபெற்ற சுவாரஸ்யமான மோதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் பகுதியில் திமுகவினர் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள தவெக அலுவலகத்தில் இருந்த சிறுவர்கள் சிலர், திடீரென “TVK கெத்து” என உற்சாகமாக முழக்கமிட்டனர். எதிர்பாராத இந்தச் சத்தத்தால் திகைத்துப் போன திமுகவினர், அந்தச் சிறுவர்களைக் கண்டு புன்னகைத்தபடி கடந்து செல்ல முயன்றனர்.
ஆனால், விடாமல் தவெக-வுக்கு ஆதரவாக அந்தச் சிறுவர்கள் கோஷமிட்டதால், அங்கு நிலவிய தேர்தல் பரபரப்பு சற்றுத் தணிந்து கலகலப்பான சூழல் உருவானது. நடிகர் விஜய்யின் தவெக கட்சி, இளைஞர்கள் மட்டுமின்றிச் சிறுவர்களிடையேயும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை இந்தச் சம்பவம் வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் திமுக கட்சியினர் பரப்புரை மேற்கொண்டு சென்ற போது தவெக அலுவலகத்தில் இருந்த சிறுவர்கள் TVK கெத்து என கூச்சலிட்டு திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தவர்களை விரட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.#Coimbatore #TVK #DMK #Kids #TNElection2026 #ViralWatch #Oneindia… pic.twitter.com/RfSLRvvwrI
— Oneindia Tamil (@thatsTamil) April 17, 2026
“>
