வளைகுடா நாட்டில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் பெங்களூரு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் இருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணியொருவர், அங்கிருந்து உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்திற்கு உள்நாட்டு விமானத்தில் பயணிக்கத் திட்டமிட்டிருந்தார்.
அப்போது அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த மத்திய தொழிற்பாதுகாப்புப் படை அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது, அந்தப் பயணியின் வாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய ரக மஞ்சள் நிற உலோகக் காப்ஸ்யூல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதிகாரிகள் அவற்றை வெளியே எடுத்துச் சோதித்ததில், அவை சுமார் 82 கிராம் எடையுள்ள தங்கம் என்பது தெரியவந்தது.
Man spits gold @ #Bengaluru airport
Alert #CISF personnel at Kempegowda International Airport (KIA) in Bengaluru detected two yellow-metal capsules, weighing around 82 grams, concealed inside the mouth of a passenger who had arrived from Dubai and was scheduled to fly to… pic.twitter.com/FqqZh15wTw
— TOI Bengaluru (@TOIBengaluru) August 26, 2026
“>
விமான நிலையத்தின் பாதுகாப்புக் கண்களை ஏமாற்றும் நோக்கில் தங்கத்தைப் பற்களுக்கு அடியில் அல்லது வாய்க்குள் மறைத்து நூதன முறையில் கடத்த முயன்ற முகமது சிராஜ் என்ற அந்தப் பயணியை அதிகாரிகள் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
