கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஒரு பேருந்தில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் சுற்றுலா பயணிகளை ஒரு தங்கும் விடுதியில் இறக்கிவிட்டார். பின்னர் பேருந்து பார்க்கிங் செய்வதற்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனை செல்லும் நுழைவு வாயில் வழியாக சென்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்தின் மேல்பகுதி நுழைவு வாயில் மீது மோதியது. இதனால் பேருந்தின் மேற்கூரையும், நுழைவு வாயிலும் சேதமானது. இதுகுறித்து அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.