தமிழகத்தில் Group I, Group II, Group IV உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 90 பணியிடங்களுக்கான Group I-ன் முதல்நிலை தேர்வு வரும் ஜூலை 13 ஆம் தேதி நடைபெறுகிறது. 29 பணியிடங்களுக்கான Group I-B மற்றும் Group I-C தேர்வு வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைப்போலவே 6,244 பணியிடங்களுக்கான Group IV தேர்வு வருகின்ற ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.