திரவ நைட்ரஜனை நேரடியாக உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, சதீஷ்குமார் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மைனஸ் நிலையில் இருக்கும் இந்த நைட்ரஜனை நேரடியாக உட்கொள்ளும் போது உள் உறுப்புகள் கருகிவிட வாய்ப்புகள் உள்ளது.

கண்களில் பட்டால் பார்வை கூட பறிபோகலாம். தொண்டை பகுதிகள், நாக்கு மற்றும் உணவு குழாய்கள் கூட கருகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே குழந்தைகளுக்கு இந்த உணவை பெற்றோர்கள் வாங்கி தர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.