ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரசி, மலிவான விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் கொடிகட்டி பறப்பதாக ஓபிஎஸ் உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனையடுத்து, ரேஷன் கடைகளில் அரிசி வாங்காத ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி வாங்கியதாக கணக்கெழுதி அரிசியை கடத்துகின்றனர். இதை அரசு உடனே தடுக்க வேண்டும். கடத்தல் தொடர்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் புகார் தெரிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்