TNPL 2023 கிரிக்கெட் தொடர் வருகின்ற ஜூன் மாதம் 12ஆம் தேதி தொடங்குவதாக TNPL 2023 நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நெல்லை, திண்டுக்கல், சேலம் மற்றும் கோவை ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டிஎன்பிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக DRS சிஸ்டம் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் tnpl 2023 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி கோவையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎல் 2023 கிரிக்கெட் தொடர் ஜூலை 17ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.