ஐபிஎல் லீக்கில், யாரும் சாதிக்க விரும்பாத சாதனையில் கோலியின் பெயர் பதிவாகியுள்ளது..

தற்போதைய காலகட்டத்தில் சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படும் விராட் கோலி, ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். விராட் கோலி 2008ல் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து விளையாடி வருகிறார்.ஆனால் இதுவரை தனது அணிக்கு அவரால் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை.. இருப்பினும், இந்த லீக்கில், யாரும் சாதிக்க விரும்பாத சாதனையில் கோலியின் பெயர் பதிவாகியுள்ளது.

இந்த பட்டியலில் கோலி மட்டுமின்றி, அவரது சக வீரர் தினேஷ் கார்த்திக்கும் இடம் பிடித்துள்ளார். கார்த்திக் 2018 முதல் 2021 வரை கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தார். 2022 சீசனுக்கு முன்னதாக கார்த்திக்கை கொல்கத்தா வெளியேற்றியது. பின் பெங்களூர் அணியில் இணைந்தார். கொல்கத்தா அணி நேற்று முன்தினம் பெங்களூரை தோற்கடித்த போது கார்த்திக் பெங்களூருவின் ப்ளேயிங்-11ல் ஒரு பகுதியாக இருந்தார். பெங்களூரு அணியின் இரண்டு வீரர்களான கோலி மற்றும் கார்த்திக் ஐபிஎல் தொடரில் அதிக தோல்வியை சந்தித்த வீரர்கள்.

தோல்வியில் கிங் கோலி :

ஐபிஎல் தொடரில் அதிக தோல்விகளை சந்தித்த வீரர் என்ற மோசமான பெருமையை கோலி பெற்றுள்ளார். கோலி 111 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளார். இதில் யாரும் அவரை முந்தவில்லை. இந்த பட்டியலில் கோலிக்கு அடுத்தபடியாக அவரது சொந்த அணியின் கார்த்திக் உள்ளார். தொடக்கத்தில் இருந்து கோலி பெங்களூருவில் இருந்த நிலையில், கார்த்திக் டெல்லி, மும்பை, குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளில் விளையாடியுள்ளார். கார்த்திக் 109 போட்டிகளில் தோல்வியடைந்தார்.

கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்காக விளையாடிய ராபின் உத்தப்பா 3வது இடத்தில் உள்ளார். 106 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளார். அதன்பிறகு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா 103 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளார். அதைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி 99 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளார். சமன் செய்யப்பட்ட போட்டிகளுக்கான புள்ளி விவரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

வெற்றியில் முதலிடம்..

அதிக தோல்விகளை சந்தித்த வீரர்கள் பட்டியலில் கார்த்திக்கின் பெயர் 2வது இடத்தில் உள்ளது. ஆனால், புள்ளி விவரப்படி பார்த்தால் அவர் தோற்றதை விட அதிக போட்டிகளில் வென்றுள்ளார். கார்த்திக் ஐபிஎல்லில் 117 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக் 5வது இடத்தில் உள்ளார். தோனி 136 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்தார். மறுபுறம், சென்னையின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 122 வெற்றிகளைப் பெற்றார்.ரோஹித்தின் 121 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. சென்னையைச் சேர்ந்த ஜடேஜா 119 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்குப் பிறகு கார்த்திக் உள்ளார்.