2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சிறப்பாக பந்து வீசி மும்பை இந்தியன்ஸ் அணியை 145 ரன்களில் திணறடித்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் இழந்தது.

கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் 10 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று 2ஆம் இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.