தமிழக டிக்டாக் பிரபலம் டான்ஸர் ரமேஷ் தனது பிறந்தநாளன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தனது நடனத்தின் வாயிலாக சின்னத்திரையில் பிரபலமான ரமேஷ், அஜித்தின் துணிவு படத்தில் ஆடியிருந்தார். மேலும் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் ஆடி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று சென்னை கேபி பார்க் பகுதியில் உள்ள குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து குதித்து ரமேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிருந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷின் சடலத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.