ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் பாஜகவின் உத்தரவிற்காக கமலாலயத்தில் காத்துக்கிடப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது பற்றி பேசிய அவர், ஆட்சியில் இருந்தவரைக்கும் ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டு பேருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. இப்போது ஆட்சி இல்லை என்றவுடனே நீயா?.. நானா?.. என பிரச்சனை நிலவுகிறது என அவர் கூறியுள்ளார்.