மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிராம ஊராட்சி தொகுப்பூதிய ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் தூய்மை பணியாளர்களுக்கும் அரசாணை அடிப்படையில் குறைந்தபட்சம் ஊதியம் வழங்க வேண்டும், ஓ.எச்.டி. ஆபரேட்டர் தூய்மை பணியாளர்களுக்கு சட்டப்படி பணிக்கொடை வழங்கிட வேண்டும், மருத்துவ வசதி, கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள், அடையாள அட்டை, பணிக்கருவிகள், சீருடை, காலனி, வண்டி, டப்பா, கரண்டி ஆகியவை வழங்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி- உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் நடைபெற்றது. இதற்கு மாவட்டச் செயலாளர் பொன். கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, பின்னர் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை உதவி கலெக்டரிடம் வழங்கியுள்ளனர்.