நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பலர் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டரை சந்தித்து விட்டு படிக்கட்டில் தவழ்ந்து வந்து கொண்டிருந்தார். அப்போது நுழைவு வாயில் படிக்கட்டில் இறங்கும் போது அவர் தவறி கீழே விழ முற்பட்டார்.

இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப் -இன்ஸ்பெக்டர் பிரியா உடனடியாக அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை கீழே விழாமல் தாங்கி பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து சக பெண் போலீசார் உதவியுடன் அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி விட்டனர். பெண் போலீசாரின் இந்த கனிவான செயலை பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை பாராட்டியுள்ளனர்.