இந்தியாவில் தீபாவளி வந்தால், சோன் பப்டி பாக்ஸ் தானாக வீட்டுக்குள் நுழைந்து விடும். ஆனால் இப்போது, அந்த இனிப்பு சுவையை முதன் முறையாக அனுபவிக்கும் ஒரு வெளிநாட்டு பையனின் வீடியோ வைரலாகி அனைவரையும் சிரிக்கவைத்திருக்கிறது. பேக்கேஜ் பார்த்தவுடன் குழப்பம், சாப்பிட்டவுடன் குஷி! “இது வாயிலே கரைந்து போச்சே!” என்று அவர் சொல்வது நெட்டிசன்களின் மனத்தை வென்று விட்டது.
View this post on Instagram
‘vegGMomo’ என்ற இன்ஸ்டாகிராம் ஐடியிலிருந்து பகிரப்பட்ட இந்த வீடியோ, ஒரு மில்லியனை தாண்டி பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. சோன் பப்டி பாக்ஸ் எடுத்தபடி, சிரிச்சபடி சாப்பிடும் அந்த பையன், பல பைட்டுகளாக சாப்பிடுவதைப் பார்த்து, நம்ம நாட்டு மக்களுக்கு கூட சோன் பப்டி மீண்டும் ஞாபகம் வந்திருக்கிறது!
வீடியோவை பார்த்தவுடன், ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்: “நம்ம ஊரில் சோன் பப்டி சாப்பிடுறதுக்கில்ல, பகிருறதுக்குத்தான்!” மற்றொருவர் எழுதியிருந்தார்: “இப்போ சோன்பப்டி தீபாவளியில எப்படி கலக்குது என்று புரியுதா?” சிலர் காமெடியா, “அவன் ரியாக்ஷன், நம்ம பசங்களோட முதல் ஜிலேபி அனுபவம் மாதிரி!” என்று எழுதினார்கள்.
