நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், உலக அரசியல் சூழலையும் தேசிய அரசியலையும் ஒப்பீடு செய்யும் வகையில் ஒரு வித்தியாசமான உரையை வழங்கினார்.
“எதையும் பார்த்து, படித்து பேசும் கட்சி நாங்கள் அல்ல; நாங்கள் உள்ளங்கையிலேயே உலக அரசியலை வைத்திருப்பவர்கள்” என்று தெரிவித்த அவர், தற்போது ஆப்பிரிக்காவின் புர்கினோபாஸோ நாட்டின் அதிபராக உள்ள இப்ராஹிம் டிராரேவை எடுத்துக்காட்டினார்.
அந்த நாட்டில் ஜனநாயகக் குரலை உயர்த்தி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வலுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் இப்ராஹிம் டிராரேவை, அந்நாட்டு மக்கள் “அவர்கள் நாட்டின் சீமான்” என புகழ்கிறார்கள் என சீமான் குறிப்பிட்டார்.
ஆனால், இந்தியாவில் தான் பேசினால் மக்கள் சிரிக்கிறார்கள் என்றும் வேதனை வெளியிட்டார். இதன் மூலம், அவர் உலகளாவிய அரசியல் புரட்சியில் தனது உரையால் உருவாக்கும் தாக்கத்தையும், நாட்டிய சிந்தனையையும் வலியுறுத்தினார்.
