2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் முக்கியமான புதிய முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது தவெக கட்சியில் விஜயுடன் ஒருசில தலைவர்கள் மட்டுமே பொதுமக்களிடம் பரிச்சயமானவர்கள். குறிப்பாக N. ஆனந்த், அருண்ராஜ் போன்ற சில தலைவர்களே மக்கள் மத்தியில் பெயர் தெரியப்படுத்தியவர்களாக இருக்கின்றனர்.
இதனை மனதில் வைத்துக் கொண்டு, வரவிருக்கும் தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகள் தொகுதிக்கு தொகுதி விஜய் பயணம் செய்து, அங்குள்ள முக்கிய நிர்வாகிகளை நேரடியாக மக்களிடம் அறிமுகப்படுத்த உள்ளார்.
பல மாவட்ட செயலாளர்களின் பெயரே கூட நிர்வாகிகளுக்குத் தெரியாத நிலை உள்ளதால், கட்சி ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாகவும், மக்கள் நம்பிக்கையை பெறும் நோக்கத்திலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம், தேர்தலுக்கான குழுசேர்க்கை மற்றும் பரப்புரை மிக அழுத்தமாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
