தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. அதன் பின் இக்கட்சியின் இரண்டாவது மாநாடு சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது. இதையடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அக்கட்சி விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது திமுகவை தோற்றுவித்த அண்ணா, அதிமுகவை தோற்றுவித்த எம் ஜி ஆர், இவர்கள் இருவரையும் எடுத்து வருவதால் தான் விஜயை எதிர்க்கிறோம். அண்ணாவின் மீதான நன்மதிப்பு மக்களுக்கு என்றும் மாறாது. அண்ணாவை குறை சொல்ல முடியாது. அவரைப் பற்றி விஜய்யால் அரைமணி நேரம் பேச முடியுமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.