
சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, ADMK ஆட்சியில் கஜா புயலை பார்த்தோம், நிபர் புயல் பார்த்தோம். புரேவி புயல் பார்த்தோம். இவ்வளவு புயலையும் கண்ட அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம். எல்லாம் புயலிலும் மக்களுக்கு தேவையான நன்மைகளை செய்து, பெயர் வாங்கிய அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம்.
விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை காலம் ஆகுது. முதல் முதலாக சந்திக்கிற புயல் இதுதான். இந்த புயல்ல பெரிய காற்று இல்லை... பெரிய சேதம் இல்ல… பெரிய மரங்கள் சாயவில்லை… பெரிய மின்கம்பங்கள் சாயல… மழை தான் பொழிந்து இருக்குது… இதற்கே இந்த அரசு தாக்கு பிடிக்க முடியாமல் இருக்குது. இதுதான் நிலைமை.
இனியாவது விடியா திமுக அரசு, போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு.. சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஒட்டிய மாவட்டங்களில் உள்ள புறநகர் பகுதியில் இருக்கின்ற வெள்ள காடாக காட்சியளிக்கின்ற நீரை, போர்க்கால அடிப்படையில் வெளியேற்றி…. வெளியேற்றும் பகுதியில் இருக்கின்ற சாலைகள் எல்லாம் சீரமைக்க வேண்டும்…
அங்கு இருக்கின்ற சகதியில் எல்லாம் அப்புறப்படுத்த வேண்டும். அங்கு பிளிச்சிங் பவுடர் போட்டு, நோய் தோற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கி இருக்கின்ற பகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என தெரிவித்தார்.