சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மிக்ஜாம் புயலின் எதிரொலியாக ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக  சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (08.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு காரணமாக சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல இடங்களில் வெள்ளநீர் வடியாமல் இருப்பதாலும், நிவாரண பணி நடைபெறுவதாலும் மாணவர்களின் நலன் கருதி நாளை சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.