துப்பாக்கிச் சூடு வழக்கில் சிபிஐ தரப்பின் குற்றபத்திரிகை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாமிர உற்பத்தி ஆலையான ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு எதிராக உள்ளது. எனவே அதனை மூட வேண்டும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு தொடர் போராட்டம் நடந்தது.  2028 மே மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மக்கள் பேரணி நடத்தினர்.அப்போது  நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 க்கும் மேற்பட்டவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  இதுகுறி த்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.  இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் நடைபெற்று வந்தது.

மதுரை மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த சூழலில் இந்த வழக்கில் தூத்துக்குடி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அர்ச்சுனன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர்,, மாவட்ட எஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார்கள். அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவும் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகையா பிறப்பித்த உத்தரவில்,  தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காவல் ஆய்வாளர் திருமலை என்பவர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்ற அதிகாரிகள் குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  எனவே இந்த சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தி குற்றபத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.