நிலவுக்கு விண்கலம் அனுப்பும் வல்லரசு இந்தியாவில், இன்றும் ஒரு மனிதன் தன் வயிற்றுப் பிழைப்புக்காக நரகத்தைப் போன்ற சாக்கடைக்குள் இறங்குவது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு பெரிய நகரத்தின் கழிவுநீர்க் கால்வாய்க்குள் ஒரு தொழிலாளி எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி இறங்கியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by theindiagrid (@theindiagrid)

ஆக்சிஜன் மாஸ்க் இல்லை, கையுறைகள் இல்லை, உடல் கவசங்கள் எதுவுமே இல்லை. மேலேயிருக்கும் சக தொழிலாளர்கள் அவருக்கு ஒரு குச்சியின் உதவியுடன் உதவி செய்கின்றனர்.

அசுத்தமான நீருக்குள் பாதியளவு மூழ்கியபடி அவர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள காட்சி பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

இன்ஸ்டாகிராமில் ‘theindiagrid’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

“நாம் நிலவுக்குச் சென்றுவிட்டோம், ஆனால் மனிதன் இன்னும் சாக்கடைக்குள்ளேயே இருக்கிறான்” என ஒரு பயனர் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

நவீன இயந்திரங்கள் வந்துவிட்ட பிறகும், ஏன் இன்னும் மனிதர்களை இத்தகைய அபாயகரமான பணிகளில் ஈடுபடுத்துகிறார்கள் என நிர்வாகத்தின் மீது மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.