உபி மாநிலம் அம்ரோகாவில் ஒரு குறிப்பிட்ட சாலைப் பகுதியில், ஒவ்வொரு நிமிடமும் பயணிகள் கீழே விழும் காட்சி காண்போரை உறைய வைத்துள்ளது.
அம்ரோகா மாவட்டத்தில் உள்ள பச்ராயூன் (Bachhrayun) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்தச் சாலையில் உள்ள ‘வேவ் சுகர் மில்’ (Wave Sugar Mill) கழிவுகள் மற்றும் கரும்புத் துகள்கள் சாலையில் சிதறிக் கிடந்தன.
अमरोहा में स्पेस टेक्नॉलॉजी वाली रोड देखिए pic.twitter.com/zGnHxOOZQf
— Luffy (@luffyspeaking) January 23, 2026
தற்போது பெய்த லேசான மழையினால், இந்தக் கழிவுகள் தண்ணீருடன் கலந்து சாலை முழுவதும் ஒரு வழுவழுப்பான திரவமாக மாறியது.
இதனால் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், லேசாக பிரேக் அடித்தாலும் பைக் அப்படியே வழுக்கிக்கொண்டு கீழே விழுகின்றனர்.
சில நிமிடங்களிலேயே டஜன் கணக்கான பைக்குகள் இப்படி விழுந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் பாய்ச்சி சாலையைச் சுத்தம் செய்த பிறகு போக்குவரத்து சீரானது.
இந்த விபத்து தொடர்பாகச் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
