மக்களவைத் தேர்தலுக்காக இரண்டாம் கட்ட வேட்பாளரை அறிவிக்க அதிமுக தலைமையிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளரும்,  முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி,

மாண்புமிகு அம்மா அவர்களை வணங்கி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவு படி 19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை கீழ்கண்டவாறு / கீழ்காணும்   நாடாளுமன்ற சட்டமன்ற தொகுதிகளிலும், சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஸ்ரீபெரும்புர் நாடாளுமன்ற தொகுதி – டாக்டர் ஜி பிரேம் குமார்

வேலூர் நாடாளுமன்ற தொகுதி – திரு டாக்டர் எஸ் பசுபதி

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி – திரு டாக்டர் ஆர் அசோகன்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி – திரு எம் கலியபெருமாள்

( திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர்)

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி – திரு. குமரகுரு முன்னாள் எம்எல்ஏ/ கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர்

திருப்பூர் மாவட்ட நாடாளுமன்ற தொகுதி – திரு பி அருணாச்சலம் ( ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட MGR அணி  செயலாளர் )

நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதி – திரு லோகேஷ் தமிழ்ச்செல்வன்

கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி – திரு சிங்கை ராமச்சந்திரன் ( கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் )

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி –  திரு கார்த்திக் அப்புசாமி என்கின்ற  கார்த்திகேயன் ( ஆனைமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் )

திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதி –  திரு பி கருப்பையா (  புதுக்கோட்டை வடக்கு மாவட்ட இளைஞரணி, இளைஞர் பாசறை  இளம்பெண்கள் பாசறை செயலாளர்)

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி – திரு சந்திரமோகன்

( பெரம்பலூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் )

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி – திரு பி பாபு ( மயிலாடுதுறை மாவட்ட இளைஞர் பாசறை,  இளம் பெண்கள் பாசறை செயலாளர் )

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி – திரு பனங்குடி ஏ  சேவியர்தாஸ் ( கல்லல் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் )

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி – திரு ஆர் சிவசாமி வேலுமணி (  தியாகராஜர் வடக்கு பகுதி கழக செயலாளர் )

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி –  வழக்கறிஞர் சிம்லா முத்துச்செல்வன்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி – முனைவர் ஸ்ரீராம் ( கழக மீனவ பிரிவு செயலாளர்)

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி – திரு. G தமிழ்வேந்தன் ( புதுச்சேரி மாநில இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் )

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரர்- திருமதி யூ ராணி ( கழக தலைமை செயற்குழு உறுப்பினர்/  கழக மகளிர் அணி துணைச் செயலாளர்).

ஆகவே  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிடுகின்ற இரண்டாவது வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டன.  விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு போட்டியிடுகின்ற வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளன.