வாட்ஸ் அப்பில் மக்களுக்கு மெசேஜ் அனுப்புவதை நிறுத்தும்படி மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு திட்டங்கள் குறித்து கருத்துக்கள் கேட்டு விக்சித் பாரத் மூலம் அனுப்பப்பட்ட மெசேஜில் மோடியின் கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மெசேஜ் அனுப்புவதை நிறுத்த மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.