நீலகிரி (தனி) தொகுதியில் இந்த முறை நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் போட்டியிடுகின்றார். அதேபோல பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிட இருப்பதாக கூறப்படும் நிலையில் நீலகிரி தொகுதி நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதியாக மாற உள்ளது. அதேபோல் தழைத்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சார்பாக இந்த முறை விவசாயியான ஜெயக்குமார் போட்டியிடுகின்றார்.