செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசு ஒரு முடிவு எடுங்க இனிமேல் ஏரி, குளங்கள், ஆறு,  குட்டை அல்லது அரசு பொது இடங்களை நீங்க ஆக்கிரமிக்க கூடாதுன்னு கடும் சட்டம் போடுங்க….  அங்கு விளம்பர பலகை வைங்க… வேலி போடுங்க…. அதிகாரிகளை விட்டு கண்காணிக்க வையுங்க… இனிமேலாவது ஆக்கிரமிப்பை தடுங்க,  இப்போ வீடு கட்டிட்ட இடத்தை விடுங்க,  வாழ விடுங்கள் மக்களை…

இப்படித்தான் செம்மஞ்சேரி, கண்ணகி நகர், கள்லுக்குட்டகி, தலை நகரங்களில் பல இடங்களில் ஆதி தமிழ் குடியினரை வாழ விடாமல் இடிச்சு இடிச்சு வெளியே தள்ளினீங்க…  அந்த இடங்களை யாருக்கு கொடுத்து இருக்கீங்க ?  இப்போ எங்களை வெளியேத்துறிங்க…  இந்த இடங்கள் யாருக்கு ? பூங்கா அமைக்க போறீங்க…. மக்கள்  வாழ்வதை விடவும், பூச்செடி வளர்க்கறது தான் பெருசா இருக்கா இப்போ…  இங்கு இருந்து வெளியேற்றி ஆத்தங்கரையில தான் வீடு கட்டி இருக்காங்க..

இங்க இருந்து வெளியேறி போய் குடியேறுனால், அதுவும்  ஆத்தங்கரை ஆக்கிரமிப்பு என்று ஆத்தங்கரையில் நீங்களே வீடு கட்டி கொடுக்குறீங்க…  அப்போ நீங்க செஞ்சா அது சட்டம்,  நாங்க செஞ்சா குற்றமா ? நீங்களும் அதே ஆத்தங்கரைய ஆக்கிரமித்து தானே கட்டி இருக்கீங்க இப்போ….

அது எப்படி ? கொடுமையா இருக்கு இதெல்லாம்….  அரசு  இந்த முயற்சியை கைவிட வேண்டும். ஒவ்வொரு நாளும்…. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த போராட்டம்….  எந்த அரசு வந்தாலும் இடுச்சு இடிச்சு வெளியே தள்ளுறது… அங்க போய் வீடு தாறோம்னு… நீங்க வீடு எப்படி கட்டி இருக்கீங்கன்னு பாருங்க ?உங்கள யாராவது… ஒரு அதிகாரி… ஒரு வட்டச் செயலாளர் அல்லது மாவட்டச் செயலாளர்… ஒரு கவுன்சிலர் யாராவது ஒருவர் நீங்க கட்டிக் கொடுக்கிற குடியிருப்பில், ஒரு இடத்துல நீங்க குடியிருக்க தயாரா இருக்கீங்களா ?  தெரிவித்தார்.