தெலுங்கானாவில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த கலாசார நிகழ்ச்சியில், ஆசிரியை ஒருவர் தனது மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடும் காட்சியை காணும் அனைவரும் கைத்தட்டி உற்சாகம் செய்துள்ளார். பிரபல தெலுங்கு நாட்டுப்புற பாடலுக்கு மாணவர்களுடன் அசால்டாக ஜோடியுடன் நடனமாடிய ஆசிரியையின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த நிகழ்வின் வீடியோவை பார்த்த பலரும், “மாணவர்களுக்கும், ஆசிரியருக்கும் உள்ள இனிமையான உறவு இதுவே” என பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
வீடியோவில், மாணவர்கள் வட்டமாக நின்று, ஒரே ரீதியான நடன அசைவுகளுடன் பாடலுக்கு நடனமாடி கொண்டு இருக்கும் போது, அந்த ஆசிரியையும் அவர்களுடன் ஒரே ஸ்டெப்பில், உற்சாகத்துடன் கலந்துக் கொள்கிறார். அவருடைய நேர்த்தியான நடன அசைவுகள், அந்த உற்சாகத்தை இன்னும் பல மடங்காக உயர்த்தியுள்ளது.
இந்த வீடியோவை @kavithareddy\_dayapally என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோவுக்கு 50 லட்சத்துக்கும் மேல் பார்வைகள், 3 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் கிடைத்துள்ளன. இதேபோல் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரி பேராசிரியர் பிரபுதேவாவின் ‘முக்காலா’ பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோவும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
