சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, கிராமத்து வீடுகளும் எப்படி மாற்றமடைந்து வருகின்றன என்பதை காட்டும் சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. களிமண் வீடாக இருந்தாலும், அந்த வீட்டில் புதிதாக வந்த மருமகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப, அதற்குள் உருவாக்கப்பட்டுள்ள மாடர்ன் சமையலறை பலரையும் வாயடைக்கச் செய்துள்ளது. இந்நிகழ்வு நெட்டிசன்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது.
View this post on Instagram
வீடியோவில் காணப்படும் வீடு, கூரைபடிகள், மூங்கில் தூண்கள் போன்ற பாரம்பரிய அம்சங்களுடன் கட்டப்பட்டிருந்தாலும், அந்த வீட்டின் சமையலறை மட்டும் பக்குவமான சிட்டி கிச்சன் போலவே இருக்கிறது. தரை முழுவதும் டைல்ஸ் போடப்பட்டுள்ளது, சமைக்க உதவும் பொருட்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டுள்ளன, மேலும் பார்ப்பவர்களுக்கு அது ஒரு கிராமத்து வீடு என்பது கூட முதலில் தெரியாது. இது போன்ற வீடியோ வெளிவந்ததும், “இது தான் இன்றைய கிராமத்து வளர்ச்சி!” என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த வீடியோவை `@dreamhomesbiaora` என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கான பார்வைகள், லைக்குகள், மற்றும் பின்னூட்டங்களை பெற்றுள்ளது. ஒருவர், “இந்த டிமாண்ட் மருமகளிடமிருந்து தான் வந்திருக்கும், அதான் ஏத்துக்கிட்டாங்க போல,” என ரசித்து கூறியிருந்தார். கிராமங்களிலும் நவீன வசதிகள் எவ்வாறு நுழைந்து விட்டன என்பதை இந்த வீடியோ அழகாகச் சொல்லிக் காட்டுகிறது.
