மகாராஷ்டிராவில் பக்திப் பாடல்களும் ஹரிநாம் சப்தாஹ வழிபாடுகளுமாக வீடே தெய்விகச் சூழலில் மூழ்கியிருந்த வேளையில், 19 வயதேயான சுராஜ் என்ற வாலிபர் எடுத்த விபரீத முடிவு ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அக்கம் பக்கத்தினரையும் உரைய வைத்துள்ளது.

ஆன்மீக நிகழ்ச்சியில் குடும்பத்தினர் அனைவரும் தீவிரமாக ஈடுபாட்டுடன் பங்கேற்றுக்கொண்டிருந்த சமயத்தில், யாருமே எதிர்பாராத விதமாகத் தனி அறையில் சுராஜ் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட கொடூரம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத்தினர் அனைவரும் வழிபாட்டு நிகழ்வில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த போது, நீண்ட நேரமாகச் சுராஜ் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவைத் தட்டியுள்ளனர். உள்ளே இருந்து எந்தப் பதிலுமில்லை என்பதால், கதவை உடைத்துப் பார்த்தபோது சுராஜ் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து கதறித் துடித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலிசார் நடத்திய முதற்கட்ட சோதனையில், சுராஜ் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்த குடும்பத்தினரும் போலிசாரும் பேரதிர்ச்சியில் உறைந்துபோயினர். அதில் தன் முடிவிற்கான காரணங்களை அந்த வாலிபர் வேதனையுடன் குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், வாலிபரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, கடிதத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்மீகக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பத்தில், ஒரு நொடியில் நிகழ்ந்த இந்தத் துயரம் அப்பகுதியில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது.